அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Rice
By Laksi Oct 26, 2024 08:02 AM GMT
Laksi

Laksi

சந்தையில் நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, நிர்ணய விலைக்கு அமைவாக அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் M.M. நயிமுதீன் தெரிவித்துள்ளார்.

அரிசி விலை தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (25) விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: இம்ரான் மகரூப் பகிரங்கம்

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: இம்ரான் மகரூப் பகிரங்கம்

சட்ட நடவடிக்கை

இதன்போது, அரிசி ஆலை உரிமையாளர்கள் 218 ரூபாவுக்கு நாட்டரிசியை சந்தைக்கு விநியோகிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Legal Action If Selling Rice At High Price

இதன்படி, நாட்டரிசியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிர்ணய விலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்! 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்! 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW