அரிசியை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: அதிகார சபை எச்சரிக்கை

Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Sep 08, 2023 06:58 AM GMT
Harrish

Harrish

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்புகள் தொடர்பில் 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: அதிகார சபை எச்சரிக்கை | Legal Action Against Selling Rice At Higher Prices

விலை நிர்ணயம்

இந்நிலையில் அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கீரி சம்பா 260 ரூபாவும், சம்பா 230 ரூபாயும், நாடு 220 ரூபாயும், சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாயும் அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்யப்படலாம்.

மேலும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே அரிசியை விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் அரிசியை அதிக விலைக்கு விற்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டால், தனிநபர் வணிகத்திற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஒரு தனியார் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.