மனுஷவின் விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
ஊழல் குற்றச்சாட்தடுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மீதான முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுஷா நனயக்கார மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (28.08.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகமவிடம் தெரிவித்த்துள்ளது.
அதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்த்துக்கொள்ளப்பட்ட போது, இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை முடிவடைந்துவிட்டதால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
எனவே, டிசம்பர் 18 ஆம் திகதியன்று மேலதிக அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் போது, விவசாயப் பணிகளுக்காக இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளிடம் செல்வாக்கு செலுத்த தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்த சந்தேக நபர் இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.