வயல் வெளியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு

Sri Lanka Police Ampara Eastern Province Crime
By Laksi Dec 27, 2024 11:06 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara)- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மல்வத்தை தம்பி நாயகபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் கடந்த (25) ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த நிலையத்தை நடாத்தி சென்ற 31 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் நடவடிக்கை:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேலதிக விசாரணை

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகுதி கசிப்பு,கோடா, கேஸ் சிலிண்டர் 1, கேஸ் அடுப்பு 1, 20 லீட்டர் கொள்கலன் 2, டங்கர் 1, இரும்பு பரள் 1 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

வயல் வெளியில் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் கண்டுபிடிப்பு | Leaky Factory Discovered By Police In Sammanthurai

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

பேராசிரியர் இஸ்ஹாக்கின் மறைவு கவலை தருகின்றது:ரிஷாட் அனுதாபம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery