இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்
Election
Local government Election
National People's Power - NPP
By Rakshana MA
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) காலை 9 மணி வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் முடிவுகள்
இதற்கமைய வௌியான 273 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,
- தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,487,832 வாக்குகள் - 3,072 உறுப்பினர்கள்
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,695,586 வாக்குகள் - 1,345 உறுப்பினர்கள்
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 767,776 வாக்குகள் - 597 உறுப்பினர்கள்
- ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 362,701 வாக்குகள் - 290 உறுப்பினர்கள்
- பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 301,337 வாக்குகள் - 239 உறுப்பினர்கள்
- இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 244,593 வாக்குகள் - 319 உறுப்பினர்கள்
- சர்வஜன அதிகாரம் (SB) - 219,916 வாக்குகள் - 171 உறுப்பினர்கள்
- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 94,762 வாக்குகள் - 79 உறுப்பினர்கள்
- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 84,669 வாக்குகள் - 102 உறுப்பினர்கள்
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 67,454 வாக்குகள் - 97 உறுப்பினர்கள்
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 62,333 வாக்குகள் - 49 உறுப்பினர்கள்
இந்நிலையில், வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 305 சபைகளில் 236 சபைகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியைப் பிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், இலங்கை தமிழ் அருசு கட்சி 34 சபைகளிலும், சமகி ஜன பலவேகய 13 சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |