இலங்கையில் சட்டவிரோத தங்க இறக்குமதி...! வெளியான அதிரடி அறிவிப்பு

Gold Price in Sri Lanka Sri Lanka Police Ranjith Siyambalapitiya Gold smuggling Crime
By Fathima May 30, 2024 05:42 AM GMT
Fathima

Fathima

நேரடி இறக்குமதியின்றி மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) ) தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றுக்கு 179 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத தங்க இறக்குமதி

அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சட்டவிரோத தங்க இறக்குமதி...! வெளியான அதிரடி அறிவிப்பு | Leading Jewelers For Gold Smuggling Will Fine

நேரடி இறக்குமதியின்றி, மூன்றாம் தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தங்கப் பொருட்களை இறக்குமதி செய்யும், அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும், சட்டவிரோத செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.