கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்
கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்முனை தேர்தல் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று (27) மருதமுனை தனியார் விடுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பிரசார நடவடிக்கைகள்
இதன்போது, சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |