நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கம் - ஐ.நாவில் ரணில்
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.
அந்த இலக்கை அடைவதற்கு இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தொடர் நேற்று (21) இலங்கை நேரப்படி இரவு 10.00 மணியளவில் ஆரம்பமானது. இதில் பங்கேற்க வந்த அரச தலைவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) அன்புடன் வரவேற்றார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு:
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டிரினிடேட் மற்றும் டொபாகோவின் மாண்புமிகு டென்னிஸ் பிரான்சிஸ் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைய நாட்களில் மொரோக்கோ மற்றும் லிபியாவைத் தாக்கிய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் எங்கள் மொரோக்கோ மற்றும் லிபிய நண்பர்களுடன் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம் என்றார்.