இனவாதத்தை தூண்டுவதற்கு எதிரான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு எதிராக சட்டத்தை நடைமுறையாக்க தயங்கமாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கான பாதையில் செல்லும் முக்கியமான தருணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத ஸ்திரத்தன்மை
நாட்டில் மதப் பூசல்களைத் தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் நோக்கம் காணப்படுகின்றன. ஆரோக்கியமான சமூகத்திற்கு மத ஸ்திரத்தன்மையை பேணப்பட வேண்டும்.
ஒரு நபர் அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அல்லது அதே நோக்கத்துடன் வேலை செய்ய முயற்சித்தால், அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 9வது அத்தியாயத்தின்படி, சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம், என தெரிவித்துள்ளார்.