லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
Nuwara Eliya
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Laugfs Gas Price
By Rakshana MA
இலங்கை முழுவதும் லாப்ஸ் எரிவாயுவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எரிவாயு பற்றாக்குறை
இது தொடர்பான தகவல்களை தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் எந்தவொருபகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |