லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்
ஜூலை மாதத்திற்காக லாஃப்ஸ் (Laugfs) எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நியோஷன் ஜே.பீரிஸ் (Niroshan J.Peiris) கூறியதாவது,
மே மற்றும் ஜூன் மாதங்களிலும் விலை மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதே நிலை ஜூலை மாதத்திற்கும் தொடரும் என உறுதி செய்துள்ளார்.
விலை விவரம்
இதனையடுத்து, தற்போது நடைமுறையில் உள்ள விலை விவரமானது, 12.5 கிலோ சிலிண்டர் விலை, ஏப்ரல் மாத விலை திருத்தத்தில் ரூ.420 அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.4,100 ஆக உள்ளது.
5 கிலோ சிலிண்டர் விலையானது, ரூ.168 உயர்வுடன், தற்போது ரூ.1,645 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டே, லாஃப்ஸ் எரிவாயு விலை கடந்த மூன்று மாதங்களாக நிலைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |