நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Climate Change Weather Landslide
By Fathima Nov 18, 2025 02:00 PM GMT
Fathima

Fathima

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது.

இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19) மாலை 4:00 மணி வரை நாட்டின் பல பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நில அபாய எச்சரிக்கை

அதன்படி, தற்போது விழிப்புடன் இருக்க வேண்டிய மட்டத்திலுள்ள முதலாவது நில அபாய எச்சரிக்கை (மஞ்சள் நிற) விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! | Landslide Warning Issued For Several Districts

பதுளை மாவட்டம் :பண்டாரவளை ,ஹப்புத்தளை ,ஊவா பரணகம, கந்தகெட்டிய

கொழும்பு மாவட்டம் : பாதுக்க

காலி மாவட்டம் : எல்பிட்டிய

களுத்துறை மாவட்டம் : வல்லல்லாவிட்ட ,புளத்சிங்கள ,தொடங்கொட

கண்டி மாவட்டம் :கங்கவட்ட கோரளை ,உடுநுவர ,உடபலாத்த, தும்பனே, பாதஹேவஹேட்ட, உடுதும்பர, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, யட்டினுவர

மொனராகலை மாவட்டம் :பிபிலை

நுவரெலியா மாவட்டம் : அம்பகமுவ, ஹங்குராங்கெத்த ,வலப்பனை ,கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம் :கிரியெல்ல, பலாங்கொடை ,கலவானை ,கொலொன்ன,இரத்தினபுரி

கேகாலை மாவட்டம்: ரம்புக்கனை ,ருவன்வெல்ல ,மாவனெல்ல ,தெரணியகலை, யட்டியாந்தோட்டை,கலிகமுவ

இதேவேளை, பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல, களுத்துறை மாவட்டம்: மத்துகம ,கேகாலை மாவட்டம்: அரநாயக்க, கேகாலை, வரக்காபொல மற்றும் இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே ஆகிய பகுதிகளில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவித்து இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.