காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

Sri Lanka Landslide In Sri Lanka Landslide
By Fathima Nov 22, 2025 01:00 PM GMT
Fathima

Fathima

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

அதன்படி பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை! | Landslide Warning Issued For 10 Districts Extended

இதேவேளை நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கங்களுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (22) பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை  

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை! | Landslide Warning Issued For 10 Districts Extended

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.