நாட்டின் பல பகுதிகளுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!

Kandy Nuwara Eliya Weather
By Fathima Dec 20, 2025 10:47 AM GMT
Fathima

Fathima

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.  

நாட்டின் பல பகுதிகளை பாதித்த கனமழை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (21) காலை 8.00 மணி வரை நீட்டித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை 

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை! | Landslide Warning Issued

அதே நேரத்தில் பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.