மக்களே அவதானம்! நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Kalutara
Sri Lankan Peoples
Landslide In Sri Lanka
By Fathima
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையினால், களு ஆற்றின் குடா கங்கை உபகுடா பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சிறு வெள்ள நிலைமை
பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.