3 மாவட்டங்களுக்கு மண்சரிவு

Sri Lanka Landslide In Sri Lanka
By Renuka Mar 22, 2023 12:43 PM GMT

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, காலி மாவட்டம், பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளும் மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல, ரத்தோட்டை, வில்கமுவ மற்றும் நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு | Landslide Warning

இந்த எச்சரிக்கை நாளைய தினம் (21.03.2023) இரவு 8.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.