நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
இந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனவும் அந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்: தொலுவ- உடுதும்பற -மெததும்புற
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை- ஹங்குரன்கெத்த- நில்தண்டாஹின்ன -மத்துரட்ட
கண்டி மாவட்டம்: கங்கவட்டக் கோறளை- பாதஹேவாஹெட்ட -அக்குறணை -யட்டிநுவர -தும்பனே -ஹாரிஸ்பத்துவ- பூஜாப்பிட்டிய- பஸ்பாகே- கோறளை- ஹதரலியத்த -குண்டசாலை- உடுநுவர -தெல்தோட்டை- பாததும்புற -பன்வில -உடபலாத -மினிப்பே -கங்க இஹல- கோறளை
குருநாகல் மாவட்டம்: ரிதிகம நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா