5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
Climate Change
Weather
Landslide
By Fathima
நாட்டில் சில மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை, சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இந்த மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
அத்தோடு, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.