நிலச் சட்டத்தில் திருத்தம்
தற்போது நடைமுறையில் உள்ள 1950 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளை திருத்த அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி, சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதில் கணிசமான நேரம் எடுக்கப்பட்டதால், நிலம் கையகப்படுத்தும் செயல்முறைக்கு எடுக்கும் நேரத்தைக் குறைக்கவும், எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் நிலங்களைக் கையகப்படுத்தவும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த நடைமுறையின் கீழ் இழப்பீடு வழங்கவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப அந்தச் சட்டத்தைத் திருத்த 11-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
வரைவு மசோதா
அதன்படி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கவனத்தில் கொண்டு, மேற்படி வரைவு மசோதாவை விரைவாக தயாரிக்க சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |