அரச வரி வருவாயில் இழப்பு: நாடாளுமன்றக் குழுவின் வெளியான அறிக்கை
வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த நாடாளுமன்றக் குழுவின் புதிய அறிக்கையொன்று 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்க வரி வருவாயில் பற்றாக்குறையை எடுத்துக்காட்டியுள்ளது.
அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருவாய் இலக்கை விட கணிசமான வித்தியாசத்தில் குறைந்துவிட்டது என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் ஆரம்ப கணிப்புகள் 3,104 பில்லியன் ரூபாய் வருமானத்தை கணித்துள்ளதாகவும் உண்மையான வசூல் 2,695 பில்லியன் ரூபாயை மட்டுமே எட்டியுள்ளதென்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதில் 408 பில்லியன் ரூபா பற்றாக்குறையாகியுள்ளது.
மேலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் 246 பில்லியன் ரூபாவை சேகரிக்கத் தவறிய இலங்கை சுங்கம் மிகப்பெரிய பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
ஆகவேப் பற்றாக்குறை இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டில் வரி வருவாயில் 3,789 பில்லியன் ரூபாய்களை அரசாங்கம் தன் இலக்காக நிர்ணயித்துள்ளது என இவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியுள்ளது.