றிஷாட் தரப்புடன் இணைந்த என்.டீ.எம் தாஹிர் (Photos)
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம் தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளார் என அக்கட்சியின் தலைவர் றிஷாட் பதுர்தீன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று (02.09.2023) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதுர்தீன் ,கட்சியின் தவிசாளர் அமீரலி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எ.எச்.எம் நவாவி மற்றும் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்
இதன்போது றிஷாட் பதுர்தீனின் ஆதரவாளர்கள் மற்றும் தாஹிரின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு தாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் இது தொடர்பாகவும் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் றிஷாட் பதுர்தீன் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.