தொடருந்தை இயக்க மறுத்து அடம்பிடித்த ஓட்டுநர்..! உணவுப் பொதியால் ஏற்பட்ட பிரச்சினை
உணவுப் பொதியை சரியான நேரத்தில் ஓட்டுநர் அறையில் வைக்கப்படவில்லை என்று கூறி, தொடருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர் மீது தொடருந்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த தொடருந்தே இவ்வாறு இயக்க மறுக்கப்பட்டுள்ளது.
உணவு பொதி...
தனக்கு, உணவுப் பொதி சரியான நேரத்தில் கிடைக்காததால் கோபமடைந்த ஓட்டுநர், தொடருந்தை இயக்குவதற்குப் பதிலாக ஓய்வு அறையிலேயே தங்கியுள்ளார்.
இதன் காரணமாக, பல மணி நேரங்கள் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்குப் பிறகு தொடருந்து ஓட்டுநரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |