குருநாகலில் கோர விபத்து : தந்தையும் மகளும் பலி
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Fathima
குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து வாரியபொல - மாதம்பே பகுதியில் இன்று(02) இடம்பெற்றுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலியானவர்கள்
மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயதுடைய தந்தையும், 16 வயதுடைய மகளுமே விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாரியபொல பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.