கொழும்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Fathima Dec 24, 2025 01:11 PM GMT
Fathima

Fathima

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது! | Kudu Roshan Has Been Arrested

சந்தேகநபரிடமிருந்து 9 மி.மீ. ரக பிஸ்டல் ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.