கொரிய வேலை வாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
Sri Lanka
North Korea
South Korea
By Dhayani
இந்த ஆண்டு கொரிய வேலை வாய்ப்புகளுக்காக 8000 பணியாளர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய வேலை வாய்ப்புகளுக்காக 6500 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அதிகரித்து 8000 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
உடன்படிக்கை கைச்சாத்து
கொரிய மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கப்பல் கட்டுமானத் துறையில் பணியிட மாறுதல் பெற விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.