பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றம்: விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை

SriLankan Airlines Sri Lanka Airport Crime Law and Order
By Vinoja Aug 05, 2023 04:30 PM GMT
Vinoja

Vinoja

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சர்வதேச விமான சேவை அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடிக்கு மேலான உயரத்தில் பட்டம் பறக்கவிடுவது  தடை செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை அதிகார சபை வேண்டுகோள்

பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றம்: விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை | Kite Flying Offence Airport Officials

இந்நிலையில் இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு  அருகாமையில்  பறக்கும் பொருட்களையோ அல்லது அதுபோன்ற சாதனங்களையோ பறக்கவிட முடியாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற பொருட்களை விமானநிலைய பகுதிகளில்  பறக்கவிடுவது விமானங்களுக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் விமான பயணத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் பட்டம் பறக்க விடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு விமான சேவை அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW