மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

Sinhala and Tamil New Year Batticaloa Sri Lankan Peoples
By Rakshana MA Apr 04, 2025 07:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு(Batticaloa) மாநகர சபை பட்டத்திருவிழா ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போட்டியில் தனியாகவும் குழுவாகவும் பங்குபற்றலாம். பங்குபற்ற விரும்புபவர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நானாவித வருமானப் பிரிவுடன் 0752647377 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என மாநகர சபை அறிவித்துள்ளது.

தங்க விலையில் திடீர் மாற்றம்! வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம்! வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

 பட்டத்திருவிழா

புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு தெரிவுகள் இடம்பெறும் எனவும் மாநகர சபை குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா | Kite Festival At Kallady Beach Batticaloa

அத்தோடு போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசு – 100,000.00 இரண்டாம் பரிசு – 50,000.00, மூன்றாம் பரிசு – 25,000.00 வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

விடுதியொன்றில் போதைப்பொருளுடன் மனைவியும் துப்பாக்கியுடன் கணவனும் கைது

விடுதியொன்றில் போதைப்பொருளுடன் மனைவியும் துப்பாக்கியுடன் கணவனும் கைது

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW