மட்டக்களப்பு, கிரான்குளத்தில் திடீர் தீப்பரவல் (photo)

Sri Lanka Police Batticaloa Fire
By Fathima Aug 26, 2023 07:33 AM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் கடற்கரையை அண்மித்துள்ள  விவசாய நிலங்களில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (24.08.2023) இடம்பெற்றுள்ளது. 

இதனால் அப்பகுதியிலிருந்த பயன்தரும் மரங்களான தென்னை, பனை என்பவை எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கவலை

தீயை விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த முயற்சித்த போதும், தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

மட்டக்களப்பு, கிரான்குளத்தில் திடீர் தீப்பரவல் (photo) | Kirankulam Fire Accident

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இத்தீப்பரவலானது திட்டமிட்ட செயலா அல்லது வேறு எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விவசாயிகளும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.