திருகோணமலையில் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான கள விஜயம்
கிண்ணியா (Kinniya) நகரசபைக்கு சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி, பிரதி தவிசாளர் அப்துல் அஸீஸ் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் செயலாளர் சகிதம் விஜயம் செய்துள்ளனர்.
குறித்த இந்த விஜயமானது, கடந்த நகரசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு இணங்க நேற்று (05) தவிசாளர் தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கழிவு முகாமைத்துவம்
அதன் பிரகாரம் அங்கு காணப்படுகின்ற வாகனங்கள் அதன் நிலைமைகள் தையல் இயந்திரங்கள், ஏனைய கருவிகள் பொருட்கள் குறித்தும் கழிவுகளை மீள் சுழற்சி செய்தல், கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு யானை வேலி அமைத்தல், மின் குமிழ்களை பொருத்துதல், இந்து மயானத்திற்கு ஏற்படுகின்ற இடையூறுகளை குறைத்தல், நீர் இணைப்பு மின்னிணைப்பை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் மேற்கூறப்பட்ட விடயங்களை மேம்படுத்துதல், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பழுதுபார்த்தல், அவற்றை பாதுகாத்தல் தொடர்பாகவும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், உறுப்பினர்கள் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் எதிர்காலத்தில் கூட்டுப்பொறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


