தாராள மனம் கொண்ட ஆசிரியர் ஜலால்தீன் நாம்தீன்: கிண்ணியாவில் சம்பவம்
பொதுமக்களின் நலனுக்காக, போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் பிரதான வீதியை அகலப்படுத்துவதற்காக, தன்னுடைய சொந்த காணியில் இருந்து ஆறு அடியை நகர சபைக்காக விட்டுக் கொடுத்துள்ளார் ஆசிரியர் ஜலால்தீன் நாம்தீன்.
ஆசிரியர் ஜலால்தீன் நாம்தீனின் குறித்த செயலானது தற்போது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
"கிண்ணியா_05 பெருந்தெரு பெனசியா(Panacea) தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா?" என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அந்நிலையில் அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காது, மனமுவந்து தன்னுடைய காணியில் சுமார் 6 அடிக் காணியை வீதியின் சுற்று வளைவிற்காக விட்டு புதிய மதிலை அமைத்துள்ளார்.
ஆசிரியரின் தாராள மனம்
இந்த தகவல் தெரிந்ததும், கிண்ணியா மக்களும் மற்றும் கிண்ணியா நகரசபையும் அவருக்கு தங்களுடைய நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரச காணியை சட்டவிரோதமாக அபகரிப்பது அதிகமாக காணப்படும் இந்த காலத்தில், இவ்வாறான தாராள மனம் கொண்டவர்கள் காணப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், குறித்த ஆசிரியரின் தாராள மனது வரவேற்கக்கூடியது மற்றும் அவரின் இந்த செயல் அனைவருக்கும் முன்மாதிரி என்றும் தற்போது பலரும் ஆசிரியர் ஜலால்தீன் நாம்தீனை பாராட்டி வருகின்றனர்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |