கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

Sri Lankan Peoples Eastern Province Public Health Inspector
By Rakshana MA Jul 02, 2025 08:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில், சுகாதார செயல்முறைகள் பராமரிக்கப்படுகிறதா என்பதற்காக கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் செயலிகள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் வழிகாட்டலில், SPHI மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்ததினை ஒட்டி, நேற்று (01) சில கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டன.

இலங்கையில் "பைத்துல்மால் நிதியம்" உருவாக்க கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு

இலங்கையில் "பைத்துல்மால் நிதியம்" உருவாக்க கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு

சுற்றிவளைப்பு

பரிசோதனைக்கிடையில், நுகர்வோருக்கு பொருத்தமற்ற நிலையில் வைத்திருந்த கோழி இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு, உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு | Kinniya Meat Shops Raided For Hygiene

மேலும், குறித்த கடைகளின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்துடன், குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மற்ற இறைச்சிக் கடைகளும் பரிசோதிக்கப்படும் என வைத்தியர் ஏ.எம்.எம். அஜித் மேலும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அரசாங்க தரப்பு வெளியிட்ட தகவல்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் அதிரடியாக கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் அதிரடியாக கைது!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery