தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கிண்ணியா நகர சபை

Trincomalee Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka Politician Local government Election Local government election Sri Lanka 2025
By Rakshana MA May 08, 2025 05:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

நடைபெற்று முடிந்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில், 4 வட்டாரங்களை வெற்றிகொண்டு, கிண்ணியா நகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட 8 வட்டாரங்களில், 4 வட்டாரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் 2 வட்டாரங்களை ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு வட்டாரத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஆனால், கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், கிண்ணியா நகர சபையில், ஐக்கிய மக்கள் சக்தி 5747 வாக்குகளைப் பெற்று முதலிடத்திலும், 5059 வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.  

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை

கைப்பற்றப்பட்ட நகரசபை

இந்நிலையில், 2714 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியும், 785 வாக்குகளைப் பெற்ற பொதுசன ஐக்கிய முன்னணியும் எந்த ஒரு வட்டாரத்தையும் வெற்றி கொள்ளவில்லை.

தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கிண்ணியா நகர சபை | Kinniya Local Council Election Result 2025

ஆனால், கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், மொத்தமாக (வட்டாரம் + பட்டியல்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா 1 உறுப்பினரையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், மொத்தமாக 15 உறுப்பினர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபையில், எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW