கச்சக்கொடிதீவு மைதான காணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Law and Society Trust Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan Apr 13, 2025 07:38 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

கச்சக்கொடிதீவு(Katchatheevu) மைதான காணிக்குள் அத்துமீறி நுழைவதற்கு, கட்டிடம் அமைத்தல், விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் விளையாட்டு நடவடிக்கையை குழப்புதல் போன்ற அனைத்தும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுக் கழகம் சார்பாக சட்டத்தரணி நளீஜ் அப்துல் சலாமினால் செய்யப்பட்ட சமர்ப்பணத்தினை கருத்தில் கொண்ட மாவட்ட நீதிபதி இந்த தடைக் கட்டளையை பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விஷேட நகர்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்ட போது சட்டத்தரணி நளீஜ் உடன் சட்டத்தரணி ராபி மற்றும் ரிஸ்வான் ஆகியோரும் கடந்த 11ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டனர்.

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

ஏப்ரல் விடுமுறைக் காலம்

கிண்ணியா - கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு வில்வெளி பிரதேசத்தை தனி நபர் ஒருவருக்கும், கச்சக்கொடிதீவு தனியார் விளையாட்டுக் கழக செயலாளருக்குமிடையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், குறித்த காணிக்குள் திடீரென நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் அந்த தனி நபரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டன.

கச்சக்கொடிதீவு மைதான காணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Kinniya Ground Issue New Court Order

இதனை எதிர்த்து, கச்சக்கொடிதீவு விளையாட்டுக்கழக செயலாளர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி அப்துல் சலாம் முகம்மது நளீஜ் மூலம் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, விஷேட நகர்த்தல் பத்திரம் மூலம், குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுக்குமாறு கோரப்பட்டது.

இவ்வாறான நிலையில் இவ்வழக்கின் அவசர தன்மையினை கருத்திற்கொண்டு, குறித்த வழக்கினை அன்றைய தினமே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தற்போது நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் விசேட கால விடுமுறை என்பதாலும், எதிர்வரும் நாட்கள் அரச விடுமுறைகள் இருப்பதனாலும் குறித்த காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, குறித்த மைதான காணிக்குள் சட்டவிரோதமாக கட்டிடப் பணிகள் இடம்பெறுவதாக, இதன்போது சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கொடுக்கப்பட்ட தீர்ப்பு

இதனைக் கவனத்தில் எடுத்த திருகோணமலை மாவட்ட நீதிமன்றம், கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டிடம் அமைக்க முற்பட்ட குறித்த நபருக்கு எதிராக, கட்டாணை எனப்படும் தடைக்கட்டளையை பிறப்பித்துள்ளது.

குறித்த கட்டளையில் வழக்காளி-எதிர்மனுதாரர், அவரின் கீழ் தங்கி வாழ்வோர், அவரின் பிரதிநிதிகள் எவரும் குறித்த காணிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என்றும் கட்டிட அபிவிருத்தி பணிகள் எதையும் மேற்கொள்ள கூடாது என்றும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் அமைதியான உடமையினை குழப்பக் கூடாது என்றும் கட்டாணை எனும் தடைக்கட்டளையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கச்சக்கொடிதீவு மைதான காணி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Kinniya Ground Issue New Court Order

மேலும், குறித்த விண்ணப்பம் தொடர்பில், ஏதும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், எதிர்வரும் 23.04.2025 திகதியன்று காலை 9.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றில் தோன்றி, உமது ஆட்சேபனையை தெரிவிக்கலாம் எனவும், தவறும் பட்சத்தில் மேற்குறித்தவாறான கட்டாணை, இடைக்கால தடை உத்தரவாக வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டளை, எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறயிருக்கும் தினம் வரை வலுவிலிருக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற கட்டளை திருகோணமலை மாவட்ட நீதிமன்ற கட்டளை சேவகரினால் அத்துமீறி கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு ஒப்புவிக்கப்பட்டதுடன், அம்மைதான காணியிலும் பகிரங்கமாக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15ஆம் திகதி விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

15ஆம் திகதி விடுமுறை தொடர்பில் அறிவித்தல்

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery