தவிசாளர் எம்.எம்.மஹ்தியிடம் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு
கிண்ணியா கண்டல்காடு, தீனேரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் இன்று (16) விவசாயிகளும் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.
உரிய சட்ட நடவடிக்கை
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் பின்னர் சில வயல் நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன சில வயல் நிலங்கள் பகுதி அளவில் சேதமிட்டு இருக்கின்றன எஞ்சி இருக்கின்ற அந்த வயல்களை பாதுகாப்பதற்காக வயல் உரிமையாளர்களால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதனையும் மீறி கால்நடை வளர்ப்பாளர்கள் எஞ்சி இருக்கின்ற வயல்களில் மாடுகளை மேய்கின்ற செயற்பாடுகள் அரங்கேறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதனால் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தவிசாளர் எம்.எம்.மஹ்தியிடம் கேட்டுக் கொண்டதற்கினங்க உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன எனவும் தவிசாளர் தெரிவித்தார்.