கிண்ணியாவில் குடும்பஸ்தவர் ஒருவர் வெட்டி கொலை!

Sri Lanka Police Trincomalee Crime Murder
By Fathima Nov 28, 2025 11:29 AM GMT
Fathima

Fathima

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாவாஜதீவு கிராம சேவகர் பிரிவில் 28 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் கழுத்தில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தை

சீரற்ற வானிலையும் மின்சார துண்டிப்பையும் பயன்படுத்தி இந்த கொலையை செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

கிண்ணியாவில் குடும்பஸ்தவர் ஒருவர் வெட்டி கொலை! | Kinniya 28 Year Old Family Member Death

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சு.பர்சாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பர்சாத், தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவரே இந்த கொலையைச் செய்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.​

விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிண்ணியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கிண்ணியாவில் குடும்பஸ்தவர் ஒருவர் வெட்டி கொலை! | Kinniya 28 Year Old Family Member Death

அத்துடன், தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். ​

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைத் தேடி பொலிஸார் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.