பிரித்தானியா வாழ் இலங்கை வம்சாவளி வைத்தியருக்கு கிடைத்துள்ள கௌரவம்
Sri Lanka
United Kingdom
By Fathima
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி வைத்தியர் ஹரின் டி சில்வாவுக்கு சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஹரின் டி சில்வா, கோவிட் தொற்றுநோய்களின் போது அவர் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானியாவில் விருது (எம்பயர் மெடல்) ஒன்றையும் பெற்றுள்ளார்.
இந்த பதக்கம் இரண்டாம் எலிசபெத் மகாராணியினால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வந்து லண்டனின் ஏழ்மையான பிரதேசத்தில் தான் வளர்ந்ததாகவும், முடிசூட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது தனக்கு கிடைத்த கௌரவம் என்றும் டாக்டர் ஹரின் டி சில்வா கூறியுள்ளார்.