கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம்! குற்றபுலனாய்வு பிரிவினரால் இருவர் கைது
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினர் தேடி வந்த நிலையில் இருவரும் திருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே குறித்த குற்ற செயலுக்கு
வலுச்சேர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.