கிளிநொச்சியில் மாசடையும் பாடசாலை வீதி: அவதியுறும் மாணவர்கள்

Kilinochchi Sri Lanka Government Of Sri Lanka
By Harrish Aug 14, 2024 10:30 PM GMT
Harrish

Harrish

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பொறுப்புள்ள அரச திணைக்களமும், கரைச்சி பிரதேச சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி மாசினை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

மாணவர்கள் பாதிப்பு

இதேவேளை, அந்த பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு பெருக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதிக்கு அருகில் மாணவர்களின் வகுப்பறைகளும், பாடசாலைக்கு செல்லும் வாயிலும் அமைந்துள்ளது.

கிளிநொச்சியில் மாசடையும் பாடசாலை வீதி: அவதியுறும் மாணவர்கள் | Kilinochchi Mahavidyalayam A Polluted Street

இந்த நிலையில், துர்நாற்றம் மற்றும் நுளம்பினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் பொறுப்புள்ள அரச திணைக்களமும், கரைச்சி பிரதேச சபையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 

கிளிநொச்சியில் மாசடையும் பாடசாலை வீதி: அவதியுறும் மாணவர்கள் | Kilinochchi Mahavidyalayam A Polluted Street

கிளிநொச்சியில் மாசடையும் பாடசாலை வீதி: அவதியுறும் மாணவர்கள் | Kilinochchi Mahavidyalayam A Polluted Street

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக இலஞ்சம் பெற முற்பட்ட குழுவினர் கைது

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக இலஞ்சம் பெற முற்பட்ட குழுவினர் கைது

ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொடிய வைரஸ்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW