இலங்கை வந்தடைந்த செய்தியை அறிவித்த காலித் அல் அமெரி
மத்திய கிழக்கில் முன்னணி சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரான காலித் அல் அமெரி, இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் (05.06.2023)ஆம் வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது திட்டங்கள் எதனையும் அறிவிக்கவில்லை.
"இலங்கையின் மக்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி, நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என இன்ஸ்ராகிராமில் பதிவு செய்துள்ளார்.
சமூக ஊடக ஆளுமை
இதனையடுத்து அவரைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரும் வளைகுடா வணிகம் 2020 பட்டியலின்படி '100 சக்திவாய்ந்த அரேபியர்களுக்குள் இடம்பெற்றிருந்தார்.
அத்துடன் துபாயில் ஸ்டார் விருது பெற்ற முதல் சமூக ஊடக ஆளுமை என்பதும்
குறிப்பிடத்தக்கது.