கெஹலியவுக்கு வீட்டு உணவு : சிறைச்சாலை நிர்வாகம் அனுமதி
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் சமைத்த உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறைச்சாலை மருத்துவமனை விதிகளின் பிரகாரம் சந்தேக நபராகவோ, குற்றவாளியாகவோ இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தரப்படும் உணவை மாத்திரமே உட்கொள்ள முடியும்.
சிறைச்சாலை திணைக்களம்
வீடுகளில் இருந்து எடுத்து வரப்படும் சமைத்த உணவுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துகளுக்குப் பதிலாக தனது வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் உணவு மற்றும் மருந்துகளைப் பயன்படுத்த அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹெலிய, வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் சமைத்த உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது