கடுவெல பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
கடுவெல - கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக காட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொரதொட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகமுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
இதேவேளை, நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பி்ட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |