முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

Batticaloa Rauf Hakeem Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Aug 04, 2025 04:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி (Kattankudy)பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலை சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக துஆப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலையில் ஒருவர் அடித்து கொலை

திருகோணமலையில் ஒருவர் அடித்து கொலை

1990 ஆம் ஆண்டு படுகொலை 

அதன்படி, அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம் என கூறினார்.

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம் | Kattankudy Massacre Probe Call

அதேவேளை, இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம்

காத்தான்குடி 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம்

நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW