காத்தான்குடி கோர விபத்தில் மாணவன் பரிதாப மரணம்! பொலிஸார் தீவிர விசாரணை

By Fathima Mar 28, 2023 11:11 AM GMT

கல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்முனை - மட்டக்களப்பு வீதியில் நாவக்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சைக்கிள் வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

சுங்கவில, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலன்னருவ சுங்காவில்லை பிறப்பிடமாக கொண்ட  அன்பாஸ் வயது 17 காத்தான்குடியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வந்த wp PG-6795 இலக்கத்துடைய வேன் ஒன்று மோதியதில் உயிரிழந்தார் குறிப்பிட்ட வாகனம் தப்பிச்சென்று விட்டது.

அந்த வேனை காத்தான்குடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்) விபத்தை ஏற்படுத்திய வேன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.