சவுதிக்காக விளையாட தயாராகும் கரீம் பென்சிமா...!
ரியல் மட்ரிட் அணியில் இருந்து நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி ப்ரோ லீக்கிற்கு பெரும் தொகை பரிமாற்றத்துடன் ரியல் மட்ரிட் கழகத்தை விட்டு வெளியேற கரீம் பென்சிமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
35 வயதான கரீம் பென்சிமா பிரான்ஸ் தேசிய அணியில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்திருந்தார்.
ரியல் மட்ரிட் அணியுடனான ஒப்பந்தம்
ரியல் மட்ரிட் அணியுடனான அவரது ஒப்பந்தம் இந்த கோடையில் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி ப்ரோ லீக்கிற்கு இரண்டு ஆண்டுகளில் 345 மில்லியன் பவுண்டுகளுடன் பாரிய ஒப்பந்தம் ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(04.05.2023)மாலை பெர்னாபியூவில் கழகத்திற்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தை விளையாடும் பென்சிமா, செவ்வாய்கிழமை பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.