காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி இருளில் சிரமப்படும் பொதுமக்கள்

Ampara Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jan 15, 2025 04:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

காரைதீவு(Karaitivu) பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பாறை - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக, இந்த பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் இவ்வாறு வீதி, இருளில் மூழ்கிய நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

சம்மாந்துறை மின்மினி மின்ஹாவின் இளம் மணிச் செம்மல் சாதனை

சம்மாந்துறை மின்மினி மின்ஹாவின் இளம் மணிச் செம்மல் சாதனை

வீதி விளக்கு 

மேலும், குறித்த அம்பாறை - மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமாகியிருந்தனர். 

இது தவிர, இப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி இருளில் சிரமப்படும் பொதுமக்கள் | Karaitivu Main Road Is Publicsuffering In The Dark

ஆனால், பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி சியாரம் வரையில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒளிந்த பின் மீண்டும் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒளிராமல் பல சிரமங்களை ஏற்படுத்துகின்றது எனவும் தெரியவந்துள்ளது.

இதன்படி, மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்தொடுவதனால் பாம்பு, முதலை, ஆமை போன்றவைகளின் அச்சுறுத்தலும் இங்கு ஏற்படுகின்றது. எனவே, இந்த வீதியின் மின்விளக்குகள் தொடர்ந்தும் ஒளிர்வதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணம்

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW