கந்தளாயில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
கந்தளாய் (Kantale) - அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேரமடு பகுதியில் தேன் எடுக்கச் சென்ற 57 வயதுடைய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரசன்னா என்பவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று மாலை (18) பிரசன்னா தனது நண்பருடன் பேரமடு காட்டுப் பகுதிக்குத் தேன் எடுக்கச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
யானை தாக்குதல்
அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியுள்ளது. யானை தாக்கியதும், அவருடன் சென்ற நண்பர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று பொலிஸாருக்கும், வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், கிராம மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, காட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரசன்னாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்போபுர பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





