களுத்துறை சிறுமிக்கு இறுதியாக வந்த அழைப்பு - வெளிவரும் தகவல்
களுத்துறையில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு இறுதியாக வந்த அழைப்பு தொடர்பான தகவலொன்று வெளியாகியுள்ளது.
விசாரணையில் வெளியான தகவல் அதன்படி குறித்த அழைப்பானது மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற தோழியே செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அந்த 19 வயது யுவதி தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர் பல்வேறு ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
16 வயது மாணவியை 19 வயது தோழியே தனது காதலனுடன் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளதுடன், அவர்கள் மாணவியை 29 வயதுடைய பிரதான சந்தேகநபரிடம் ஒப்படைத்துவிட்டு விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாணவியை பிரச்சினைக்கு உள்ளாக்கியது இந்த 19 வயது தோழியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக, சிறையில் உள்ள 19 வயது யுவதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த அழைப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுள்ள அதேவேளை இது தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் பெறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.