பணத்தை திருடிச் செல்லும் காகம்! குற்றம் சுமத்தும் பொதுமக்கள்
களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகம் ஒன்றினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காகம் யாரோ ஒருவரது வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பணத்தை திருடிச் செல்லும் காகம்
இந்நிலையில், கடை ஒன்றுக்குள் நுழைந்த குறித்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண்ணின் முதுகில் அந்த காகம் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த காகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் இரு ஆடை விற்பனை நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு : 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |