கல்முனைப் பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேவை
கல்முனை (Kalmunai) பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னரங்கு சேவை பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது நேற்று (11) கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது.
Smile desk டிஜிடல் சேவை திறந்த வைக்கும் நிகழ்வில் முதலில் இறைவணக்கம் உட்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
புதிய சேவை
பின்னர் நிகழ்வில் வரவேற்பு உரை மற்றும் தலைமை உரை கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சேவை தொடர்பான அறிமுக நிகழ்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் அகாஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் பர்கானா ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்வில் ஏனைய அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் யு.எல்.மஹ்ரூப், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்து ஒய்வு பெற்ற எம்.எம்.நஸீர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








