கல்முனை பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்
கல்முனையில் (Kalmunai) வாய் சுகாதார பிரிவால் முன்னெடுக்கப்படும் சேவை தொடர்பில் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, குறித்த சேவைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாய் சுகாதாரம்
பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.ஹபீப் முஹம்மட் இனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இக்கூட்டம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வாய் சுகாதார பிரிவுகளால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், குறித்த சேவைகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகளும் பிராந்திய பணிப்பாளரினால் வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பாடசாலை பல் சிகிச்சையாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





